கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிப் போகையில், அல்லது ஏதேனும் புதிய சாப்ட்வேர் புரோகிராம்களால் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படுகையில் கம்ப்யூட்டரைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு System Restore நமக்கு உதவுகிறது. ஆனால் அண்மையில் ஒன்றை அறிய முடிந்தது.
Thursday, March 26, 2009
Browse » Home »
{Honey-tamil} ,
Norton
» நார்டன்(Norton) தடுக்கும் சிஸ்டம் ரீ-ஸ்டோர், சரிசெய்வது எப்படி..?
நார்டன்(Norton) தடுக்கும் சிஸ்டம் ரீ-ஸ்டோர், சரிசெய்வது எப்படி..?
கம்ப்யூட்டரில் நார்டன் பாதுகாப்பு தொகுப்பு பயன்படுத்துபவர்களுக்கு இந்த பயன்பாட்டில் தடை ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதில் உள்ள நார்டன் இன்டர்நெட் செக்யூரிட்டி சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்குகையில் தடை செய்வது கண்டறியப்பட்டது. எனவே சிஸ்டம் ரெஸ்டோர் வசதியை இயக்க முயற்சிக்கையில் நார்டன் தொகுப்பின் செயல்பாட்டினை நிறுத்தி வைப்பது கட்டாயமாகிறது. இதற்குக் கீழ்க்கண்டவாறு செயல்படவும்.
1.நார்டன் தொகுப்பின் மெயின் விண்டோவிற்குச் செல்லவும்.
2.ஆண்டி வைரஸ் அல்லது நார்டன் Internet Security டேபில் கிளிக் செய்திடவும்.
3.இதில் பேசிக் செக்யூரிட்டி என்பதில் Autoprotect என்பதன் மேல் இடது புறமாகக் கிளிக் செய்து கான்பிகர்(configure) என்பதனைத் தேர்ந்தெடுக் கவும்.
4.இடது புறமாகக் கிடைக்கும் பிரிவில் Miscellaneous என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

5.வலது புறம் உள்ள பிரிவில் "Turn on protection for my Symantec product" என்ற இடத்தில் கிளிக் செய்து டிக் அடையாளத்தை நீக்கவும்.

6.பின் ஓகே கிளிக் செய்து இப்போது மேற்கொண்ட செட்டிங்ஸ் முழுவதும் சேவ் செய்து வெளியேறவும்.
இனி சிஸ்டம் ரெஸ்டோர் இயக்கி கம்ப்யூட்டரை பாதுகாப்பான முந்தைய இடத்திற்கு மீட்கவும். பின் மீண்டும் கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து மேலே குறிப்பிட்ட வழிகளில் நார்டன் தொகுப்பில் சென்று பாதுகாப்பு பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பாதுகாப்பினை மீண்டும் உறுதிப்படுத்தவும்.
Subscribe to:
Post Comments (Atom)
Comments :
0 comments to “நார்டன்(Norton) தடுக்கும் சிஸ்டம் ரீ-ஸ்டோர், சரிசெய்வது எப்படி..?”
Post a Comment