உங்கள் கோப்புகளை ஏதேனும் கோப்புப்பகிர்வான் (File sharing) தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை நண்பர்களுக்குக் கொடுத்து அவர்களை இணையிறக்கம் (Download) செய்யச் சொல்லி கோப்புகளைப் பகிர்ந்து மகிழ்ந்தவர்கள் இணையத்தில் எத்தனையோ பேர். அதுபோல உங்கள் கணினியின் திரையை தொலைவில் உள்ள நண்பர்கள் பார்ப்பதற்கும், அங்கே இருந்தபடி உங்கள் கணினியையே இயக்கவும் உதவும் ஒரு மென்பொருள்தான் டீம்வியூவர்.
சில வினாடிகளுக்குள்ளாகவே உலகின் ஏதோ ஒரு இடத்தில் உள்ள நண்பரது கணினியையும், உங்களது கம்ப்யூட்டரையும் இணைத்து அவரது கணினியை நீங்களும், உங்கள் கணினியை அவரும் இயக்கலாம்.
கோப்புகளைப் பகிர்வதும், இணைய அரட்டை (chat) அடிப்பதும் இதில் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
வணிக ரீதியில்லாத, தனிமனிதப் பயன்பாடுகளுக்கு இந்த அப்ளிகேசன் இலவசமாகவே கிடைக்கிறது.
தொலைதூரத்தில் உள்ள சர்வர்களை (remote server) இங்கிருந்தே இயக்கவோ, மறுபடி துவக்கவோ (Reboot) இயலும்.
நிறைவான பாதுகாப்பையும் (hight security), அது உயர் வேகத்தையும் டீம்வியூவரிடம் எதிர்பார்க்கலாம்.
ஃபயர்வால் (firewall) பாதுகாப்புச் சுவர் போன்றவற்றை பல நேரங்களில் ரிமோட் டெஸ்க்டாப்(Remote Desktop) ஊடுருவாது.
ஆனால் ஃபயர்வால் பிரச்சினைகளை டீம்வியூவர் எதிர்கொள்வதில்லை. ஏதேனும் ஒரு மென்பொருள் பயன்பாட்டை கணினியில் install செய்வதற்கு அட்மினிஸ்ட்ரேட்டர் உரிமம் தேவைப்படும். ஆனால் டீம்வியூவரை இன்ஸ்டால் செய்வதற்கு Administrator உரிமம் தேவைப்படாது.

Comments :
0 comments to “உங்கள் கணினியை தொலைவில் உள்ள நண்பர்களுடன் பகிர்வது எப்படி?”
Post a Comment